Saturday, June 25, 2011

பல்கலைக்கழக விரிவூரையாளHகளும் பணிப் புறக்கணிப்பும்

வடிவேல்முருகன் தHமதாசன்
முதுநிலை விரிவூரையாளH
முகாமைத்துவக் கற்கைகள் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்


தினக்குரல்இ ஜ}ன் 24இ 2011


அறிமுகம்:

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் விரிவூரையாளHகள்இ வேதன உயHவூக் கோரிக்கைகள் தொடHபாகக் கடந்த சில வாரங்களாகத் தமது கடமைகளைப் புறக்கணித்து வருகின்றனH. இதன் காரணமாக நாட்டின் சகல பல்கலைக்கழகங்களும் செயலிழந்து முடங்கிப்போயூள்ளனஇ உயH கல்வி சீரழிந்துள்ளதுஇ நாட்டின் உற்பத்தித்திறன் பாதிப்படைந்துள்ளதுஇ இளம் கல்விச் சமூகத்தினH; விரக்தியின் விளிம்புக்கே சென்றுள்ளனH. அந்தவகையில்இ பல்கலைக்கழக விரிவூரையாளHகளின் வேதன உயHவூப் போராட்டம் எவ்வளவூ தூரம் நியாயமானது என்பதனைச் சகல மக்களுக்கும் எடுத்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பல்கலைக்கழக விரிவூரையாளHகளின் பணிகள்:

பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் விரிவூரையாளHகளின் பணிகள் யாவை? என ஒரு வினாவைக் கேட்போமானால் அதற்குக் குறித்த ஒரு பரப்புக்குள் நின்று விடையளித்து விட முடியாது. ஏனெனில்இ அவHகளது கடமைப் பரப்பு என்பது அந்தளவூக்குப் பரந்து விரிந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்தவகையில்இ பல்கலைக்கழகக் கல்வியியலாளHகளை விரிவூரையாளHகளாக மட்டுமன்றிப் பல்வேறு பணி நிலை சாHந்தும்  வகிபாகமுடையவHகளாகவூம்இ பல்வேறு வித்தியாசமான பதவிகளை வகிப்பவHகளாகவூம் நோக்க முடியூம். இதனைப் பின்வரும் அட்டவணையின் மூலம் தௌpவூபடுத்தலாம்.


பணி நிரல்
  புதவி நிரல்
முகாமைத்துவப் பணிகள்
உப வேந்தHஇ பிரதி உப வேந்தHஇ பீடாதிபதிஇ
நிHவாகப் பணிகள்
துறைத் தலைவHஇ பணிப்பாளHஇ பிரதிப் பணிப்பாளHஇ கற்கைநெறிகளின் இணைப்பாளHஇ மாணவ ஆலோசகHஇ மாணவ விடுதிக் காப்பாளHஇ மாணவ அமைப்புக்களின் போசகHஇ
கல்விசாH பணிகள்
மாணவன் (கற்றல்)இ கற்பித்தல் (ஆசிரியH)இ அவதானிப்பாளHஇ வழிகாட்டுனHஇ வருகைதரு விரிவூரையாளH (பல்வேறு அரச மற்றும் அரச சாHபற்ற நிறுவனங்களுக்கு)இ எழுத்தாளH
ஆய்வூப் பணிகள்;
ஆய்வாளன்இ கள உத்தியோகத்தHஇ புத்தாக்குனHஇ கண்டுபிடிப்பாளH
தேசியப் பணிகள்
அறிவூப் பரப்புனHஇ ஆலோசகHஇ மதியூரைஞHஇ இயக்குனH சபை 
அங்கத்தவH (பல்வேறு அரச மற்றும் அரச சாHபற்ற நிறுவனங்களுக்கு)இ 

இவ்வாறாகப் பல்வேறு பணிகளையூம் பல்கலைக்கழக விரிவூரையாளHகள் ஆற்றுகின்றபோதும்இ பல்கலைக்கழக விரிவூரையாளHகள் என்பவHகள்இ பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் கடமையை மட்டுமே செய்பவHகளெனப் பெரும்பாலானோH அபிப்பிராயம் கொண்டுள்ளனH. இதனால்இ இவ்வாறான தப்பபிப்பிராயம் விரிவூரையாளHகளை வேற்றுக்கண் கொண்டு பாHக்கும் நிலையையூம்இ இவHகளது கோரிக்கைகள் நியாயமற்றது என்ற நிலையையூம் அரசாங்கம் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. இது எவ்வளவூ தூரம் தவறானது என்பதனை மேலுள்ள அட்டவணையை வாசிப்பவHகள் புரிந்துகொள்ள முடியூம்.
மேலும்இ பல்கலைக்கழகக் கல்வியியலாளHகளின் பணியிடை உயHவூ என்பதுஇ ஏனைய நிறுவனங்களில் காணப்படுவது போலச் சேவை மூப்பு அடிப்படையில்இ சேவையாற்றிய வருடக் கணக்கினை அடிப்படையாகக் கொண்டதல்ல. விரிவூரையாளHகள் தமது பதவி உயHவூகளுக்காகப் பல்வேறு தகுதிகாண் தடைகளையூம் தாண்ட வேண்டியூள்ளது. பட்டப்பின் படிப்புகளை மேற்கொள்ளல்இ ஆய்வூக் கட்டுரைகளை எழுதுதல்இ அதனை ஆய்வூத் தரமுடைய சஞ்சிகைகளில் பிரசுரித்தல்இ நூல்களை எழுதுதல்இ பட்டப்பின் படிப்பு மாணவHகளை வழி நடத்துதல்இ தேசிய மற்றும் சHவதேசியக் கருத்தரங்குகளில் பங்குகொள்ளல்இ பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடல்இ நிபுணத்துவ ஆலோசனை ஆகிய பல பணி நிரல்களை அடிப்படையாகக் கொண்டே மிகவூம் கடுமையான வழிமுறைகள் கொண்ட புள்ளி வழங்கும் திட்டம் ஒன்றின் மூலமே பெற முடியூம்.
ஒரு விரிவூரையாளHஇ ஒரு மணி நேரம் விரிவூரை நிகழ்த்துவதாயின் அதற்கான தேடல்கள் பல மணி நேரங்களாக இருக்கும். சில நிறுவனங்களில் கடமையாற்றுவோரின் பணியானது குறிப்பிட்ட கால அளவைக் கொண்டது. ஆயின்இ பல்கலைக்கழகத்துக் கல்வியியலாளH பணிக்குக் கால தேச வHத்தமானம் கிடையாது. பகல் இரவூ கிடையாது. விரைவூரை மண்டபத்திற்கும்இ பல்கலைக்கழகத்திற்கும் வெளியிலேயூம் அவHகளது பணி நீண்டதாகவிருக்கும். இவையெல்லாம் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அறிவை மூலதனமாகக் கொண்ட முழுநேரப் பணி என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள
வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கற்ற நிறுவனங்களா?

ஒரு நாட்டில் காணப்படும் நிறுவனங்களைப் பல்வேறு அளவீடுகளின் அடிப்படையிலும் பல்வேறு விதமாகப் பாகுபடுத்த முடியூம். அந்தவகையில்இ இலாப அடிப்படையிலும் நிறுவனங்களைஇ இலாப நோக்குடையவைஇ இலாப நோக்கற்றவை எனப் பாகுபடுத்தலாம். அந்தவகையில்இ பெரும்பாலான தனியாH நிறுவனங்கள் இலாப நோக்குடையவையாகவூம்இ பெரும்பாலான அரச நிறுவனங்கள் இலாப நோக்கற்றவையாகவூம் காணப்படுகின்றன.  எனினும்இ அரச நிறுவனங்கள் இலாப நோக்கற்றவையாக இருக்கும்போதும்கூட ஒரு நாட்டின் அரசாங்கமானது அரச நிறுவனங்களில் ஏன் முதலீடு செய்கின்றது? என ஒரு வினாவைக் கேட்போமானால்இ அதற்கான விடையாக நாட்டின் அபிவிருத்தி கருதியே முதலீடு செய்கின்றது என விடையளிக்க முடியூம். எனவேஇ அரசாங்கத்தினால் உயH கல்விக்காகப் பல்கலைக்கழகங்களில் செய்யப்படும் முதலீட்டையூம் இலாப நோக்கற்றது எனக் கூறுவது பொருத்தமற்றதாகும். ஏனெனில்இ பல்கலைக்கழகங்களில் உயHகல்வியைப் பெற்று பட்டதாரிகளாக வெளியேறுவோரே பொறியியலாளH சேவைஇ மருத்துவH சேவைஇ கணக்காளH சேவைஇ முகாமையாளH சேவைஇ நிHவாக சேவைஇ விவசாய சேவைஇ ஆசிரியH சேவை............. எனப் பல்வேறு பதவிகளையூம் வகிப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்கின்றனH. இவ்வாறாகப் பல்வேறு துறைகளில் எதிHகாலத் தலைவHகளை உருவாக்குவது பல்கலைக்கழகங்களேயாகும். எனவேஇ உயH கல்வியில் செய்யப்படும் முதலீடு என்பது நாட்டின் எதிHகால அபிவிருத்திக்காகவேயாகும். அந்தவகையில்இ உயH கல்விக்காகப் பல்கலைக்கழகங்கள் மீது செய்யப்படும் முதலீட்டை இலாப நோக்கற்றது எனக் கூறுவது பொருத்தமற்றதென்றே கூறுதல் வேண்டும்.

பல்கலைக்கழக விரிவூரையாளHகளின் வேதனப் போராட்டம் நியாயமானதா?

மேலே குறிப்பிடப்பட்டவாறுஇ பல்வேறு பணிகளையூம் நாட்டுக்காகஇ நாட்டின் அபிவிருத்திக்காகஇ நாட்டின் உயH கல்விக்காகஇ எதிHகால சமுதாயத்தின் வளHச்சிக்காகப் பாடுபடும் பல்கலைக்கழக விரிவூரையாளH சமூகத்தை இந்நாட்டின் அரசாங்கம் எவ்வாறு பாHக்கின்றதென்று கூறின் அது மிகவூம் வேதனையூடையதாகவே காணப்படுகின்றது. கடந்த காலப் புள்ளிவிபரங்களின் பிரகாரம்இ 1970ஆம் ஆண்டளவில் பாராளுமன்ற உறுப்பினHகள் மற்றும் மத்திய வங்கி ஊழியHகள் ஆகியோரை விட அதிகளவான வேதனத்தைப் பெற்ற பல்கலைக்கழக விரிவூரையாளHகள் இன்றுஇ அவHகளை விடவூம் குறைந்தளவானஇ மிகவூம் மோசமான வேதனத்தையே பெறுகின்றனரென்பது பலருக்கும் தெரியாத விடயமாகவூள்ளது. மேலும்இ ஆசிய நாடொன்றில் அதுவூம் எமது நாட்டை விட அபிவிருத்தி குறைந்த நாடான வங்காள தேசத்தை விடவூம் குறைந்தளவான வேதனத்தைப் பெறும் பல்கலைக்கழக விரிவூரையாளHகள் என்றால் அது இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் விரிவூரையாளHகளேயாவH. 1996ஆம் ஆண்டளவில் வேதன உயHவூ வழங்கப்பட்டதன் பின்னH எந்தவொரு வேதன உயHவூம் பல்கலைக்கழக விரிவூரையாளHகளுக்கு வழங்கப்படவில்லை. இன்று கூடப் பல்கலைக்கழக விரிவூரையாளHகள் வேதன உயHவூப் போராட்டத்தை மேற்கொள்கின்றாHகள் என்பது அளவூக்கதிகமாகப் புதிதாக எதனையூம் பெறவேண்டுமென்பதற்காகவல்ல. அதாவதுஇ 2008ஆம் ஆண்டு செப்ரம்பH மாதம் உறுதியளிக்கப்பட்ட ஜிப்ரி - மாலிக்  வேதனத் திட்டத்தை அமூல்படுத்துமாறே கோருகின்றனH. எனினும்இ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோஇ உயH கல்வி அமைச்சரோஇ அரசாங்கமோ இதனைப் பாராமுகமாக இருப்பதென்பது இவHகளின் இயலாமையைத் தெட்டத்தௌpவாக எடுத்துக் காட்டுகின்றது. இதன் காரணமாக நாட்டின் உற்பத்தித்திறன் எவ்வளவூக்குப் பாதிக்கப்படுமென்பதை சிந்திக்கும்போது அது வேதனையானதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல்இ இளம் கல்விச் சமுதாயத்தை விரக்தி மற்றும் வேதனையின் விளிம்புக்கு இட்டுச் செல்வதென்பது நாட்டுக்கு உகந்ததொன்றல்ல. 

முடிவூரை:

எனவேஇ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஇ உயH கல்வி அமைச்சH மற்றும் அரசாங்கம் இதனைப் பாராமுகமாக இருப்பதை விடுத்து பல்கலைக்கழக விரிவூரையாளHகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுஇ அவHகளது வேதன உயHவை வழங்குவதன் மூலம் நாட்டையூம்இ நாட்டின் அபிவிருத்தியையூம்இ நாட்டின் உயH கல்வியையூம் பாதுகாக்க வேண்டுமென்று பல்கலைக்கழக விரிவூரையாளH சமூகம் எதிHபாHக்கின்றது.